search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம் குர்ரான்"

    விராட் கோலியுடன் இணைந்து விளையாடியிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய சீனியர் அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. தற்போது இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக, கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாட முடிவு செய்தார்.

    ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக சர்ரே அணியில் இருந்து விலகினார். இந்த அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் குர்ரான் இடம் பிடித்திருந்தார். இவர் விராட் கோலியுடன் இணைந்து விளையாட ஆர்வமாக இருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

    தற்போது இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் சாம் குர்ரான் இதுகுறித்து கூறுகையில் ‘‘விராட் கோலி என்னுடைய அணியின் சக வீரராக வர இருந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மற்ற அணி பந்து வீச்சாளர்களை பார்த்து சிரிக்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

    இங்கிலாந்து மண்ணில் விராட் கோலிக்கு எந்தவொரு எதிரணி பந்து வீச்சாளர்களும் பந்து வீச விரும்புவார்கள். இங்கிலாந்து ஆடுகளம் அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். தற்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்வேன்.



    ஒவ்வொரு வீரர்களும் விராட் கோலி போன்ற மிகப்பெரிய வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்குள் தங்களை பரிசோதனை செய்ய வாய்ப்ப கிடைக்கும். விராட் கோலி சர்ரே அணிக்கு விளையாடவில்லை என்றதும் சக வீரர்களுக்கு கஷ்டமாக இருந்தது.

    ஏனென்றால், விராட் கோலி வந்தால் அதிகமான ரசிகர்கள் வருவார்கள். அவருடைய பயிற்சியில் இருந்து கற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பு வீணானது’’ என்றார்.
    46 நாட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட்டை பின்னுக்குத் தள்ளினார் சாம் குர்ரான். #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் சாம் குர்ரான் அறிமுகமானார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர், இங்கிலாந்து அணியில் அறிமுகமாகிய இவருக்கு, 20 வயது 21 நாட்களே ஆகும்.

    இதன்மூலம் இளம் வயதிலேயே இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம்பிடித்த 2-வது வீரர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட்டிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார். பிராட் 20 வருடம் 67 நாட்களில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். 46 நாள் வித்தியாசத்தில் சாம் குர்ரான் 2-வது இடத்தில் உள்ளார்.



    பென் ஹோலியாக் 19 வயது 195 நாட்களில், மிக இள வயதில் அறிமுகமானவர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். பென் ஸ்டோக்ஸ் 20 வயது 82 நாட்களுடன் 4-வது இடத்திலும், ஆண்டர்சன் 20 வயது 138 நாட்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
    மொயீன் அலியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.



    இந்த ஜோடி 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை மொயீன் அலி பிரித்தார். 7-வது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஆரோன் பிஞ்ச் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 5-வது பந்தில் டக்அவுட் ஆனார்.



    அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் 8 ரன்னி்ல் மொயீன் அலி பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேற, ஆஸ்திரேலியா தடம்புரள ஆரம்பித்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தன் பங்கிற்கு 56 ரன்கள் சேர்த்தார். கேரி 44 ரன்களும், ஆர்கி ஷார்ட் அவுட்டாகாமல் 47 ரன்களும் சேர்க்க ஆஸ்திரேலியா 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 4-0 என முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 242 ரன்கள் வித்தியாசத்திலும், 4-வது போடடியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் ஒயிட்வாஷ் ஆகும். ஒயிட்வாஷை தடுக்கும் நோக்கத்தில் ஆஸ்திரேலியாவும், ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கிலாந்தும் களம் இறங்குவதால் இன்றைய ஆட்டம் பரபரப்பானதாக காணப்படும்.



    ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச், 2. டிராவிஸ் ஹெட், 3. ஷேன் மார்ஷ், 4. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 5. டி'ஆர்கி ஷார்ட், 6. அலெக்ஸ் கேரி, 7. டிம் பெய்ன், 8. அஷ்டோன் அகர், 9.  கேன் ரிச்சர்ட்சன், 10. நாதன் லயன், 11. பில்லி ஸ்டேன்லேக்.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜேசன் ராய், 2. பேர்ஸ்டோவ், 3. ஹேல்ஸ், 4. ஜோ ரூட், 5. மோர்கன், 6. பட்லர், 7. மொயீன் அலி, 8. சாம் குர்ரான், 9. லியாம் பிளங்கெட், 10 அடில் ரஷித், 11. ஜேக் பால். சாம் குர்ரானுக்கு இது முதல் ஒருநாள் போட்டியாகும்.
    பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அந்த அணியில் சாம் குர்ரான் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvPAK #SamCurran #BenStokes #HamstringInjury

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றது. 

    இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை (ஜூன் 1-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்சின் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. 



    இந்த தசைப்பிடிப்பின் தாக்கம் சற்று தீவிரமாக உள்ள நிலையில், பென் ஸ்டோக்சுக்கு பதிலாக, சர்ரே அணியின் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விலகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம் குர்ரான், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரானின் சகோதரர் ஆவார். #ENGvPAK #SamCurran #BenStokes #HamstringInjury
    ×